10 - 11 நாட்களுக்கான எரிபொருட்களே கையிருப்பில்? மறுப்பு தெரிவிக்கிறார் கம்மன்பில

10 - 11 நாட்களுக்கான எரிபொருட்களே கையிருப்பில்? மறுப்பு தெரிவிக்கிறார் கம்மன்பில-No Fuel Shortage in the Country-Udaya Gammanpila

- ஒரு மாதத்திற்கான எரிபொருள் கையிருப்பில்; கூட்டுத்தாபன தலைவர்

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தனது ட்விற்றர் கணக்கின் ஊடாக இதனை அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (19) பெட்ரோலிய தேசிய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித்த வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், 11 நாட்களுக்கான டீசல் மற்றும் 10 நாட்களுக்கான பெற்றோல் மாத்திரமே யைகிருப்பில் உள்ளதாக ஆனந்த பாலித்த வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு தொடர்பில்  முன்கூட்டியே அறிவித்தமை போல், வெளிநாட்டு பண நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்டது போல், எரிபொருள் பற்றாக்குறை காணப்படுமாயின் வேறு எவரும் அதனை அறிவிக்கும் முன் தான் அதனை அறிவிப்பேன் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற தொழிலாளர் ஒருவரின் பொய்யான தகவல் தொடர்பில் பதிலளிக்க நேரிட்டமை தொடர்பில் தான் வருந்துவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு மாதத்திற்கு நாட்டிற்கு அவசியமான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/20/2021 - 12:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை