உதய கம்மம்பிலவிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு SLFP முடிவு

பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் சுற்றாடல் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவிக்கையில்:

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையின்  போது அமைச்சர் கம்மன்பிலவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது எதிர்க்கட்சிக்கு சாதகம் ஏற்படும் வகையில் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு அமைச்சர் உதய கம்மன்பில வினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல. அது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்கேற்புடன் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்பதையும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது அமைச்சர் கம்மன்பில வினால் தனித்து பொறுப்பேற்க முடியாதது என்றும் அது முழு அமைச்சரவையையும் சார்ந்தது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 07/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை