Sinopharm தடுப்பூசி சிறந்த நோயெதிர்ப்பை காட்டுகிறது; ஆராய்ச்சியில் தகவல்

Sinopharm தடுப்பூசி சிறந்த நோயெதிர்ப்பை காட்டுகிறது; ஆராய்ச்சியில் தகவல்-Over 95% Individuals Developed Antibodies Against the Sinopharm Vaccine-USJ Researchers

சீன தயாரிப்பு Sinopharm தடுப்பூசியை பெற்றவர்களில் 95% ஆனோரின் உடலில் சிறப்பான நோயெதிர்ப்பு சக்தி (Antibody) உருவாவதாக, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத்தகவல் அறியப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே ஆகியோர் தலைமையில் இவ்வாய்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உடலில் உருவாகும் அன்டிபொடிகள் மற்றும் T Cell, தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் அதிக வீரியம் கொண்ட கொவிட் டெல்டா திரிபு உள்ளிட்ட திரிபுகளுக்கு மிகவும் சிறப்பாக பதிலளிப்பதாக அதில் தெரிவிக்கப்படுகின்றது.

டெல்டா திரிபுகளுக்கு பதிளிப்பது மற்றும் அதனை நடுநிலைப்படுத்தும் அன்டிபொடிகள், இயற்கையாக தொற்றுநோயொன்று ஏற்படும்போது செயற்படும் விதத்தில் செயற்படுவதாக குறித்த ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Tue, 07/20/2021 - 09:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை