ஹரின் MPயிடம் 05 மணிநேர வாக்குமூலம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (28) புதன்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர் ஹரின் பெர்னாண்டோவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பிலேயே அவர் வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

காலை 10 மணிக்கு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹரின் பெர்னாண்டோவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் ஹரின் பெர்னாண்டோவுடன் குற்ற விசாரணைப் பிரிவுக்கு சமுகமளித்திருந்தனர்.

 

சுபாஷினி சேனநாயக்க

Thu, 07/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை