புலமைப்பரிசில், GCE (A/L) பரீட்சைத் திகதிகள் மீண்டும் மீளாய்வு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் மீண்டும் மீளாய்வு செய்யப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும் எனவும், உயர்தரப் பரீட்சைக் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

எனினும் இப்பரீட்சைகளுக்கான திகதிகள் மீண்டும் மீளாய்வு செய்யப்படும் எனவும் இப்பரீட்சைகளுக்கான திகதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நேற்று தெரிவித்தார்.

Mon, 07/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை