அனுமதியற்ற வியாபார நிலையங்கள் அகற்றல்

வவுனியா தாண்டிக்குளம் ஏ 9 வீதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபார நிலையங்கள் நேற்று (09) அகற்றப்பட்டன.

குறித்த பகுதியில் ஏ9 வீதி மற்றும் தொடரூந்து பாதைக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் சிலரால் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு வியாபார செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் சுற்று வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று காலை குறித்த பகுதிக்குச்சென்ற வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபார நிலையங்களை அகற்றியதுடன், சுற்று வேலிகளையும் அகற்றிச் சென்றனர்.

குறித்த பகுதி சௌபாக்கிய தேசிய வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தை விஷேட நிருபர்

 

 

Sat, 07/10/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை