தனிமைப்படுத்தல் சட்டம் சகலருக்கும் பொதுவானது

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

இதில் ஜோசப் ஸ்டாலின், பியுமி ஹன்சமாலி ஆகியோர் மாத்திரம் விதிவிலக்கல்ல.

ஆகவே போராட்டங்களில் ஈடுப்படுவதை சில தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ச்சியாக ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் மருந்து இதுவரையில் உலகில் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

வைரஸ் தொற்று தொற்றாமல் இருப்பதற்காக மாத்திரமே தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் எந்தளவிற்கு சாத்தியமாக அமையும் என்பது இதுவரையில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றார்.

Fri, 07/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை