கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் இன்று

உகந்தை முருகன் ஆலய உற்சவமும் ஆரம்பம்

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று(10) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

அதேவேளை உகந்தமலை முருகனாலயத்தின் ஆடிவேல் உற்சவமும் இன்று ஆரம்பமாகின்றது.

நாட்டில் நிலவும் கொவிட் தாக்கம் காணரமாக இருபெரும் ஆலயங்களின் கொடியேற்றம் முதல் தீர்த்தோற்சவம் வரையிலான காலப்பகுதியில் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் அடிவேல்விழா உற்சவங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.கதிர்காம உற்சவ திருவிழாக்காலங்களில் ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று 10ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி 25ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது. நாட்டின் கொவிட் நிலைமை காரணமாக பக்தர்கள் மற்றும் பாதயாத்திரீகர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நேர்த்திக்கடனும் செலுத்தமுடியாது.

ஆலய குருக்கள், நிருவாகசபையினர், உபயகாரர்கள் என 30 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கும் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஆலயத்துள் அனுமதிக்கப்படுவர். பொலிசார் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரையும் விசேட பாதுகாப்பு மற்றும் வீதிச்சோதனை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டு மேற்படி ஆலயங்களுக்கு வருகை தருவதை தவிர்க்குமாறும் அவ்வாறு வருகை தருகின்றவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

காரைதீவு குறூப் நிருபர்

Sat, 07/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை