நைஜீரியாவில் கடத்தப்பட்ட தாய்மார், குழந்தைகள் மீட்பு

கொள்ளை மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடும் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் 100 பேரை நைஜீரிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

ஜம்பாரா மாகாணத்தில் ஜூன் 8ஆம் திகதி இவர்கள் கடத்தப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின்போது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களை விடுவிக்க பணயத்தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை என்று மாகாண அரசின் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மேலதிக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்ட பின்னர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 2020 முதல் இதுபோன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். பெரும்பாலானவர்கள் பணயத்தொகை கொடுக்கப்படாமலேயே மீட்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர்.

Thu, 07/22/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை