அரிசி தட்டுப்பாட்டுக்கு இடமில்லை; இன்று முதல் நெல் கொள்வனவு

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

நாட்டில் எத்தகைய அரிசித் தட்டுப்பாடும் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மேலும் ஒன்றரை மாதங்களுக்கு போதுமான அரிசி கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இன்று முதல் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்:

விவசாய அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சு ஆகியன இணைந்து விவசாயிகளிடமிருந்து சிறந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கும் அதனை சாதாரண விலைக்கு நுகர்வோருக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. அதற்கிணங்க இன்றுமுதல் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த போகத்தில் 5 இலட்சம் ஹெக்டேயருக்கு அதிகமாக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் மூலம் 22 இலட்சத்து ஐம்பதினாயிரம் மெற்றிக்தொன் விளைச்சலை நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அதன்மூலம் 14,625 மெட்ரிக்தொன் அரிசியை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒகஸ்ட் முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான அரிசி எம்மிடம் இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/01/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை