மு.கா, ஜே.வி.பி, த.மு.கூ கூட்டாக செயற்பட தீர்மானம்

ஹக்கீம், அனுர, மனோ சந்தித்து முடிவு

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டனி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக செயற்பட தீர்மானித்துள்ளன. இந்த  செயற்பாட்டில் ஏனைய சிறு கட்சிகளையும் இணைத்துக்கொள்ளவும் முடிவு செய்யபட்டுள்ளது.

நேற்று ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் அனுர குமார திசாநாயக்க எம்பி, விஜித ஹேரத் எம்பி, மனோ கணேசன் எம்பி, ரவுப் ஹக்கீம் எம்பி, வேலுகுமார் எம்பி, உதயகுமார் எம்பி, முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர், தமுகூ-,ஜமமு கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணிதரன் முருகேசு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

Thu, 07/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை