நகர்ப்புற பசுமை வீட்டு வாயு உமிழ்வுக்கு காரணமான நகரங்களிடையே சீனா முன்னிலை

167 நகர்ப்புற மையங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட காலநிலை - வெப்பமயமாதலுக்கு பங்களிக்கும் வாயுக்களை வெளியேற்றும் பாதிக்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் - கிட்டத்தட்ட சீனாவில் உள்ளதாக உமிழ்வு போக்குகளின் பகுப்பாய்வு செய்யும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், தனிநபர் அடிப்படையில், உலகின் செல்வந்தர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நகரங்களில் இருந்து உமிழ்வு பொதுவாக வளரும் நாடுகளில் உள்ள நகர்ப்புற மையங்களில் இருந்து வருவதை விட அதிகமாக உள்ளது என்று புரன்டியர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளளனர்.

இந்த ஆய்வு 53 நாடுகளில் 167 நகரங்களால் அறிவிக்கப்பட்ட பசுமை வீட்டு வாயு உமிழ்வை ஒப்பிட்டுப் பார்த்தது, மேலும் அவற்றில் ஷாங்ஹாய், பெய்ஜிங் மற்றும் ஹண்டன் உள்ளிட்ட 23 சீன நகரங்களை மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப்பார்த்ததிலி; அவை மொத்தத்தில் 52 சதவீதமாக காணப்பட்டது.

இது சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அதிகமான நகரங்களை உள்ளடக்கியது, ஏனெனில் அவை உலகளாவிய உமிழ்வுகளுக்கு பெரிய பங்களிப்பு மற்றும் காலநிலை விவாதத்திற்கு முக்கியத்துவம் அளித்தன.

இந்த கண்டுபிடிப்புகள் நகரங்கள் உமிழ்வைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துக்காட்டுகின்றன என்று தெற்கு சீன நகரமான குவாங்சோவில் உள்ள சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானியும் ஆய்வின் இணை ஆசிரியருமான ஷாக்கிங் சென் தெரிவித்தார்.

தொழில்துறைக்கு முந்தைய அடிப்படைகளுடன் ஒப்பிடுகையில் சராசரி உலகளாவிய புவி வெப்பமடைதல் ஏற்கனவே ஒரு பாகை செல்சியஸுக்கு மேல் உயர்ந்துள்ளது.

சீனாவில், தனிநபர் உமிழ்வு அதிகமுள்ள நகரங்கள் பொதுவாக பெரிய உற்பத்தி மையங்களாக இருக்கின்றன, வளர்ந்த நாடுகளில் அதிக தனிநபர் விகிதங்களைக் கொண்ட நகரங்கள் வலுவான நுகர்வு அளவைக் கொண்டிருக்கின்றன என பகுப்பாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Sat, 07/17/2021 - 17:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை