எரிபொருள் விலை மட்டுமன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

எரிபொருள் விலைகளை மட்டுமன்றி அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், இனவாத நோக்கிலே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. வேறுநோக்கமே இதன் பின்னணியில் உள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக எதிரணி போராட்டம் நடத்தியது. இராணுவம் புடைசூழ எதிர்க்கட்சித் தலைவர் வாகனத்தில் வந்தார்.அவர் நடந்து வந்திருக்கலாம். மிதிவண்டியில் வந்திருக்கலாம்.மஹிந்த ராஜபக்ஷவின் வயது பற்றி பேசுகிறார்கள். அவர் மிதி வண்டியில் வந்து தான்போராட்டம் நடத்தினார்.

அரசாங்கத்தால் 04 தடவைகள் 5,000 கொடுப்பனவு வழங்கப்பட்டது. கிராம மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 10 ஆயிரம் பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தடுப்பூசி வழங்கும் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.மக்களின் பாதுகாப்பே எமக்கு பிரதானமானது.உறுப்பினர்களின் நிலைப்பாட்டையே கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அமைச்சர் கம்மன்பில கஷ்டமான முடிவையே எடுத்தார். ஜனாதிபதி அவருக்கு சார்பாக பதில் வழங்கினார்.எதிர்காலத்தில் எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பான யோசனையை அமைச்சர் முன்வைத்துள்ளார்.

எதிரணிக்கு அவ்வாறான திட்டம் இருக்கவில்லை. நான்கரை வருடங்கள் நாட்டை நாசமாக்கினீர்கள். எரிபொருள் விலைகளை மட்டுமன்றி அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாம் எடுக்கும் அனைத்து முடிவுகளும் பிரபலமானவையல்ல என்றும் குறிப்பிட்டார்.(பா)

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

 

 

Tue, 07/20/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை