தனிமைப்படுத்தல் சட்டத்தில் திருத்தங்கள் அவசியம்

சபையில் நேற்று ரணில் வேண்டுகோள்

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் எவரையும் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப முடியாது. தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரிக்கும் போது அடிப்படை  உரிமைகளுக்கு பாதிப்பில்லாதவாறே அதனை தயாரிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானபோது, நேற்றுமுன்தினம் 37 பேர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ள தொழிற்சங்க தலைவரான ஜோசப் ஸ்டாலின் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அறிந்த நபரே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச தொழிலாளர் சங்கம் என்பன இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான சம்பவம் நடக்கக் கூடாது. நீதி அமைச்சரிடம் கேட்கின்றேன் இது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் விரைவில் கலந்துரையாட வேண்டும். இவ்வாறு நடந்துகொண்ட பொலிஸார் தொடர்பாக குழுவொன்றை அமைக்குமாறு கேட்கின்றோம். இல்லையென்றால் இதுவரையில் செய்த நல்ல விடயங்களும் கழுவிக்கொண்டு போக நேரிடாலம்.

கூட்டங்களை நடத்த அடிப்படை உரிமை உள்ளது. ஆனால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் யாரையும் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு எங்கேயும் அனுப்ப முடியாது. தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரிக்கும் போது அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பில்லாதவாறே அதனை தயாரிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 07/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை