பாகிஸ்தான்- ரஷ்ய எரிவாயு குழாய் திட்டம் இழுபறியில்

பாகிஸ்தானும் ரஷ்யாவும் கடந்த மே மாதம் செய்து கொண்ட எரிவாயு குழாய் அமைப்பு திட்டம் சுமுகமாக முன்னெடுக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் மாற்று எரிவாயு குழாய் அமைப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப் போவதாக தெரிவித்திருப்பதையடுத்தே இரு தரப்பு உடன்படிக்கக்கு தடங்கல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் மொஸ்கோவில் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இது தொடர்பான பங்குதாரர் ஒப்பந்தம் எதிர்வரும் 27ம் திகதி செய்து கொள்ளப்பட வேண்டுமென்றும் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்படும் வகையில் ஒரு குழுவை அனுப்பி வைக்கப்போவதாகவும் பாகிஸ்தானுக்கு ரஷ்யா கடித மூலம் அறிவித்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் அதற்கு பதிலளிக்கப்பட்டாத நிலையிலேயே இஸ்லாமாபாத்துக்கும் மொஸ்கோவுக்கும் இடையிலான உறவில் இது பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவிகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் எரிசக்திக்கான அமைச்சரவை குழு பாகிஸ்தான் பெட்றோலிய நிறுவனத்திடம் மாற்று எரிவாயு குழாய்த் திட்டமொன்றை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டது. இம்மாதம் நடுப்பகுதிக்குள் இத்திட்டம் இறுதி செய்யப்பட வேண்டும் என நியூஸ் இன்டர்நெஷனல் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

Tue, 07/13/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை