அரசின் சேதனப்பசளை திட்டத்தை முடக்க பல்வேறு இடையூறுகள்

எத்தகைய தடைகள் வந்தாலும் திட்டத்தை கைவிடோம்

சேதனை பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் பயணத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்த பல்வேறு வழிகளில் பணம் முதலீடு செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அரசாங்கத்தின் பயணத்தை எத்தகையை தடைகளை ஏற்படுத்தினாலும் நிறுத்த முடியாதென கூறியுள்ளார்.

சேதனை பசளை பயன்பாட்டை ஊக்குவிக்க உள்ளூராட்சி நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொழும்பில் நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இரசாய உர பாவனையை ஒழிக்கும் செயல்பாட்டில் வருடாந்தம் 100 பில்லியன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் மாஃபியாக்களுடன்தான் நாம் மோதுகிறோம்.

இது எளிதான விடயமல்ல. அனைவருக்கும் பணம் செலுத்துவதற்காக எங்கள் பயணத்தை மாற்றியமைக்க இந்த நிறுவனங்கள் பல வழிகளில் பணத்தை முதலீடு செய்கின்றன. இதனால் அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளும் எங்கள் திட்டத்தை ஆதரிப்பது மிகவும் முக்கியமாகும். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சூழலுக்கு நட்பான விவசாயத்தை உருவாக்கும் பயணத்திற்கு இது ஒரு சிறந்த ஊக்கமாகும்.

இந்த விடயத்தை வெற்றிக்கொள்ள உள்ளூராட்சி நிறுனங்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. என்னுடன் அல்லது இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷவுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுகளை நடத்தலாம். நாட்டில் உரத்துக்கு எவ்வித பஞ்சமும் இல்லை.

உள்ளூராட்சி மன்றங்கள் பெரும்பாலும் கிராம மக்களுடன் இணைந்துதான் பணியாற்றுகின்றன. எனவே, எது சரியான பாதை என்பதை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 07/14/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை