வருமானம் குறைந்ததால் தொழிலாளர்கள் திண்டாட்டம்; உரமற்ற தேயிலை தோட்டங்களில் குறைந்தளவு கொழுந்து பறிப்பு

உடபளாத்த பிரதேச சபை MP குமாரவேல் கனகரட்ணம்

தேயிலைக்கு தோட்டங்களுக்கு தேவையான உரமில்லாத காரணத்தால் செழிப்பின்றி காணப்படும் தேயிலை தோட்டங்களில் குறைந்தளவு கொழுந்தையே பறிக்கமுடிகிறது. இதனால் பெருந்தோட்டங்களில் 18 கிலோ கொழுந்து பறிக்கமுடியாத காரணத்தால் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாட்சம்பளம் கிடை க்காமல் தொழிலாளர்கள் வாழ்க்கை செலவை சமாளிப்பதற்கு கஷ்படுகின்றனர் என உடபளாத்த பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர் குமாரவேல் கனகரட்ணம் தெரிவித்தார்.

கம்பளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், தொடர்ந்து பேசுகையில், கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் வேலை செய்த இளைஞர் யுவதிகள் கொரோனா தொற்று நோய் காரணமாக தோட்டத்திற்கு வந்தபின் மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலை யில் வீட்டிலே இருக்கின்றனர்.

தோட்டங்களிலிருக்கும் வெற்று காணிகளை விவசாயம் செய்ய முயற்சித்தால் தோட்ட நிருவாகம் இடம்கொடுப்பதில்லை. இதனால் தோட்ட மக்கள் போதிய வருமாமின்றி கஸ்படுகின்றார்கள். சிறு தேயிலை தோட்டங்களில் போதியளவு உரம்மில்லாத காரணத்தால் இப் பகுதிபல தோட்டங்களில் 500 கிலோ தேயிலை கொழுந்து பறித்தவர்கள் இப்பொழுது குறைந்தளவு கொழுந்தையே பறிக்கின்றனர்.

ஆகவே விவசாய அமைச்சர் இவர்களின நிலைமைகளை அறிந்து தேவையான உரங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடபளாத்த பிரதேச சபைக்கு உட்பட்ட பெருந்தோட்ட பகுதியில் சுமார் 28,000 தமிழ் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றனர்.இதனால் பல இளைஞர்கள் முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலை கொண்டு கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று நோய் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்தமையால் எந்த வருமானமுமின்றி வீட்டில் இருந்த இவர்களிடம் பினாஸ் கம்பனி மாதாந்த பணத்தை வட்டியுடன் செலுத்துப்படி கேட்கின்றனர். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து வட்டியில்லாமல் பணத்தை மட்டும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும எனவும் குமாரவேல் கனகரட்ணம் கேட்டுக்கொண்டார்.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

Mon, 07/12/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை