எரிபொருள் விலை குறைப்பு, நிவாரணம் வழங்க முயற்சி

நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவிப்பு

பொது மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

நிதி அமைச்சில் தமது கடைமைகளை பொறுப்பேற்ற பின்னர் பெல்லன்வில ரஜமஹா விகாரைக்கு (08) மாலை விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட நிதி அமைச்சர், அங்கு செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்மார்.

நாட்டின் பொருளாதார நிலைமைகளை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி இது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வாரெனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார். சகல பொருளாதார காரணிகளையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி எரிபொருள் விலை குறித்து ஒரு தீர்வை எடுப்பாரென எதிர்பார்க்கிறோம்.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் கடினமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எமது கட்சியின் கொள்கையான பெறுபேறு பொருளாதாரத்தின் முன்னேற்றமாக அமையுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

 

Sat, 07/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை