தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கோரிக்கை

தாரிக் ஈ பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் பாகிஸ்தான் மீது நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்த உதவுமாறு பாகிஸ்தான் அரசு ஆப்கானிய தலிபான்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ள ஆரம்பித்திருப்பதால் அங்கு தலிபான்களின் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன. அதே சமயம் தலிபான்கள் பாகிஸ்தான் மீது பழிதீர்க்கும் தாக்குதல்களை நடத்தலாம் என்பதால் பாகிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தளம் அமைக்கப்படும் சாத்தியம் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ள நிலையில் இவ்வேண்டுகோளை பாகிஸ்தான் விடுத்துள்ளது.

‘பாகிஸ்தானுக்கும் ஆப்கபானிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் வேலி அமைக்கும் பணியை பாகிஸ்தான் மேற்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் அப்பணியை அநேகமாக பூர்த்தி செய்துவிட்டதாக பாகிஸ்தான் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தலிபான்களுக்கான ஆதரவு பரவலாகக் காணப்படுகிறது. கைபர் பக்துன்காவா மாநில அரசின் அமைச்சரான ஹிஷாம் இனாமுல்லாஹ் சட்ட சபையில் உரையாற்றும் போது பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வீரத்துடன் போராடி வருகிறார்கள் என்று புகழ்ந்து பேசினார். இவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். தலிபான்கள் எங்கள் பாதுகாவலர்கள் என்ற ஒரு மனப்பான்மை பாகிஸ்தான் மக்களிடம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு ஆதரவாக டூவிட்டர் பக்கங்கள் தலிபான்கள் எமது காவலர்கள் என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே தாரிக் ஈ. பாகிஸ்தான் தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பாக்- ஆப்கான் எல்லையோரமாக பாகிஸ்தான் மீது தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

Thu, 07/01/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை