அரசை நெருக்கடிக்குள் தள்ளவே எரிபொருள் தட்டுப்பாடு பிரசாரம்

அமைச்சர் உதயகம்மம்பில நிராகரிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள முயற்சிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 27 நாட்களுக்கான பெட்ரோலும், 24 நாட்களுக்கான டீசலும் எம்மிடம் கையிருப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,..

இலங்கைக்கான எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இல்லை, ஆகவே விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்,எனவே இப்போதே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக்கொள்ளுங்கள், வீடுகளில் இப்போதே களஞ்சியப்படுத்தி வைத்துவிடுங்களென சமூக தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த பொய்யான தகவலால் மக்களையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளவே சிலர் முயற்சிக்கின்றனர் என்றார்.

 

Mon, 07/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை