த.தே.கூட்டமைப்பினருக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் முக்கிய கவனம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலய்னா  பி டெப்லிட்ஸ்சுக்குமிடையில் நேற்றைய தினம் கொழும்பில் விசேட சந்திப்பொன்று  நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு நடைபெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை, தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 07/16/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை