நான்கு விலங்குகளுக்கு கொரோனா தொற்று

ஒராங்குட்டான், சிம்பன்சிகளை தாக்கியது

தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள இரு ஒராங்குட்டான் குரங்குகள் மற்றும் இரு சிம்பன்சி குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அத்தோடு மேலும் நான்கு விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள 02 சிங்கங்களுக்கு கொரோனா தொற்றுள்ளமை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 07/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை