​பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகிறது; பாக். ஊடகவியலாளர்கள் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி முறைக்கு முடிவுகட்டப்பட்டு ஜனநாயக ஆட்சி ஆரம்பமாகி இருப்பதாக தெரிந்தாலும் ஊடகவியலாளர்களும் ஊடக உரிமையாளர்களும் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் என்று பாக். ஊடகவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவ ஆட்சியின் போது இராணுவ புலனாய்வுத் துறை, உள்நாட்டு புலனாய்வுப் பிரிவு என்பவற்றின் கண்காணிப்பில் கடமையாற்ற வேண்டியிருந்ததாகவும் தற்போதும் ஜனநாயக அரசு என்பதற்கு பின்னால் சுதந்திர ஊடகத்துறை எல்லா வழிகளிலும் நசுக்கப்படுவதாகவும் இராணுவ விவகாரங்களில் ஊடகங்கள் மூக்கை நுழைப்பதை இராணுவம் சகித்துக்கொள்வதில்லை என்றும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்ரான்கான் பதவியேற்ற பின்னரும் பத்திரிகை விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டன. விளம்பரங்கள் நிறுத்தப்படும் என ஊடக நிறுவனங்கள் பயமுறுத்தப்பட்டன. தொலைக்காட்சி அலைவரிசைகள் சீர்குலைக்கப்பட்டன. தமது எல்லையைத் தாண்டும் ஊடகவியலாளர்கள் பயமுறுத்தல்களுக்கு உள்ளாயினர். சிலர் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். அதே இராணுவ ஆட்சியின் சாயல் தொடரவே செய்கிறது என்று பாக். ஊடகவியலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு தப்பியோடி தஞ்சமடைந்தவர்களும் பின்தொடரப்படுவதாகவும் அரசை விமர்சனம் செய்யும் ஊடகவியலாளர்கள் தேசத்துரோகிகளாகவும், இம்ரானுக்கு எதிரானவர்களாகவும் முத்திரை குத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Sat, 07/10/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை