இலவச கல்விக்கு பாரிய அச்சுறுத்தல்!

நடவடிக்கை எடுப்போம் -

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவச கல்விக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும். அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது தேசிய ரீதியிலான தேவையாக இருப்பதை நாங்கள் அனுமதிக்கின்றோம்.

என்றாலும் அந்த அடிப்படை தேவைக்கு அப்பால் சென்று இலவசக் கல்வியை அழிப்பதற்கு உயர் கல்வி கட்டமைப்புக்கு அப்பால் ஒரு நிறுவனம் ஸ்தாபிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையின் மூலம் உயர் கல்வியின் ஆரோக்கியத் தன்மை, தரம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இறையாண்மை முழுமையாக இல்லாமல் போவதுடன் இலவசக் கல்வியும் பாரிய பிரச்சினைக்குள்ளாகும்.

அதனால் இலவசக்கல்வி மற்றும் அதன் உரிமையாயாளர்களின் சுதந்திரம் மற்றும் போராட்டங்களின் பெயரால் உத்தேச சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Thu, 07/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை