சீனாவில் வானளாவிய கட்டடங்களுக்கு தடை

சீனாவின் உயரமான கட்டடங்கள் 500 மீட்டரைத் தாண்டி கட்டப்பட முடியாது என சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் ஜென்ஸென் நகரில் அமைந்துள்ள 300 மீட்டர் உயரமான பிளாஸா கட்டடம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பயங்கரமாகக் குலுங்கி முன்னும் பின்னுமாக அசைந்ததையடுத்தே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இனிமெல் 250 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட கட்டடங்களுக்கான அனுமதி மட்டுப்படுத்தப்படும் என்றும் 100 மீட்டருக்கும் அதிக உயரமான கட்டடங்களில் தீயணைப்பு ஏற்பாடுகள் முறையாக அமைக்கப்படுகிறதா என்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்களின் பாதுகாப்பு மற்றும் அளவுக்கு அதிகமான வர்த்தக அலுவலகங்கள் அமைக்கப்படுதல் ஏற்கனவே உயரக் கட்டுப்பாட்டுக்கான காரணம் என சீன தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழு தெவித்திருந்தது. இதே சமயம் பிளாஸா கட்டடம் முன்னும் பின்னுமாக அசைந்ததற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகின நூறு மிக உயரமான கட்டடங்கள் பட்டியலில் சீனா 44வது இடத்தை வகிக்கிறது. 500 மீட்டர் உயரமான 10 கட்டடங்களில் ஐந்து சீனாவில் அமைந்துள்ளன.

Tue, 07/13/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை