உள்ளக இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்கள் மேலும் தளர்வு

உள்ளக இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்கள் மேலும் தளர்வு-Health Guidelines Further Relaxed-Indoor Musical Shows Allowed-50 Percent

தற்போது நடைமுறையிலுள்ள கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.

இன்று (16) முதல் அமுலாகும் வகையில் குறித்த நடமுறைகள் அமுலுக்கு வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன விடுத்துள்ள வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய
- உள்ளக இசை நிகழ்ச்சிகளுக்கு மாத்திரம் அனுமதி (மண்டப ஆசன எண்ணிக்கையில் 50%; திறந்தவௌியில் அனுமதி இல்லை)
- ஹோட்டல்கள், தங்குமிட விடுதிகளுக்கு அனுமதி
- சூதாட்ட விடுதிகளை திறக்க அனுமதி
- மிருகக்காட்சிசாலைகள் (25% கொள்ளளவு), சரணாலயங்கள், சிறுவர் பூங்காக்களை திறக்க அனுமதி
- விளையாட்டுகள்: பௌதீக ரீதியிலான தொடுகையுடன் சம்பந்தப்பட்ட  விளையாட்டுகள் தவிர்ந்த ஏனைய விளையாட்டுகளுக்கு அனுமதி.

Fri, 07/16/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை