கொவிட் அச்சம்: உலகெங்கும் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி

அதிகரித்து வரும் கொரோனா தொற்று சம்பவங்கள் பொருளாதார மீட்சியை பாதிக்கும் என்ற அச்சத்திற்கு மத்தியில் உலகெங்கும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை காண்பித்துள்ளன.

ஆசியாவில், ஜப்பானின் நைக்கி 224 சுட்டெண் தரநிலை 1 வீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டு கடந்த ஆறு மாதங்களில் தனது குறைந்த நிலையை பதிவு செய்தது.

நியூயோர்க்கில், தி டோவ் ஜோன்சன் இன்டஸ்ட்ரியல் சராசரி 2 வீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டிக்கும் அதே நேரம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிலும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை உடைய டெல்டா திரிபு பற்றி அச்சத்திற்கு மத்தியில் சில நாடுகளில் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வேகமாகப் பரவும் இந்த டெல்டா திரிபு பற்றிய கவலைகளால் வரிசையில் ஐந்தாவது அமர்வுக்கு ஜப்பான் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளன.

சர்வதேச நிலவரங்களை ஒட்டி இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 587 யுள்ளிகளை இழந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Wed, 07/21/2021 - 15:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை