யாழ்நகரில் சில நிலங்களை சீனாவுக்கு வழங்க முயற்சியா?

பிரதமர் அலுவலகம் முற்றாக மறுப்பு

அரசாங்கம் வடக்கில் காணிகளை சீனாவிற்கு வழங்கவுள்ளதாக வெளியான தகவல்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.  நெடுந்தீவில் உள்ள 40 ஏக்கர் காணியும் யாழ்ப்பாணத்தில் அரசாங்க பழைய கட்டிடமொன்றையும் சீனாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்   தெரிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ச இந்த நோக்கத்திலேயே சமீபத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்மேற்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் பிரதமர் அலுவலகம் இதனை நிராகரித்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீறிதரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்த வேளை இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என அதிகாரிகள் தெரிவித்தனர் என பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஜி.காசிலிங்கம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் எந்த நிலத்தையும் சீனாவிற்கு வழங்கும் திட்டம் இல்லை,யாழ் கச்சேரியின் பழைய கட்டடத்தை சீனாவிற்கு வழங்கும் எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Thu, 07/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை