'நினைவில் வாழும் ஷம்ஸ்'

- 19 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

பிரபல எழுத்தாளரும் கவிஞருமான எம்.எச்.எம்.ஷம்ஸின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு Zoom தொழில்நுட்பத்தின் மூலமாக நடைபெறும்.

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலாபூசணம் எம்.ஏ.எம்.நிலாம் வரவேற்புரை நிகழ்த்துவார்.

இந்த நிகழ்வில் பிரபல எழுத்தாளர்கள்,கவிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் உரைநிகழ்த்தவுள்ளனர்.

தெனகம ஸ்ரீவர்தன . திக்குவல்லை கமால். அன்பு ஜவஹர்சா .ஜவாத் மரைக்கார்.மேமன்கவி.முருகபூபதி (அவுஸ்திரேலியா) லரீனா ஏ.ஹக், ஒலுவில் ஜே.வஹாப்தீன், மும்தாஸ் ஹபீல், எம்.என். அமீன், ரத்னசிறி, டொக்டர் தாஸிம் அஹமது, எம்.எச்.எம். மஷாயிர் ஆகியோரும் உரையாற்றுவர்.

இதில் பஸ்மினா அன்சாரின் கவி வாழ்த்தும் இடம்பெற இருப்பதோடு எம்.எச்.எம்.ஷம்ஸ் பற்றிய கருத்துப்பரிமாற்றலும் இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரின் புதல்வர் ஷம்ஸ் பாஹிம் நன்றியுரை நிகழ்த்துவார். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக நாச்சியாதீவு பர்வீன் செயற்படுவார்.

https://us05web.zoom.us/j/81400059380?pwd=NXZkSS9kL3VKZnVNYVA4dElFRkJ3Zz09
Meeting ID: 814 0005 9380
Passcode: 123456

Thu, 07/15/2021 - 21:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை