நிதி அமைச்சராகவும், எம்.பியாகாவும் பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

நிதி அமைச்சராகவும், எம்.பியாகாவும் பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்-Basil Rajapaksa Sworn in As MP & Minister of Finance-Mahinda as Economic Development

- பிரதமருக்கு பொருளாதார கொள்கைகள், திட்ட அமுலாக்கல் எனும் புதிய அமைச்சு
- கடமைகளை இன்றே பொறுப்பேற்றார்

பசில் ராஜபக்ஷ அவர்கள், இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

நிதி அமைச்சராகவும், எம்.பியாகாவும் பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்-Basil Rajapaksa Sworn in As MP & Minister of Finance-Mahinda as Economic Development

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் பெயர், கட்சியின் தலைமைச் செயலாளர் சாகர காரியவசமினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) பசில் ராஜபக்ஷவைப் பாராளுமன்ற உறுப்பினராகதை் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

பசில் ராஜபக்ஷ, 2007ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன் முறையாகப் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட  பசில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார்.

நிதி அமைச்சராகவும், எம்.பியாகாவும் பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்-Basil Rajapaksa Sworn in As MP & Minister of Finance-Mahinda as Economic Development

கொவிட் நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு செயற்பாடுகளுக்குத் தலைமை வகித்த பசில் ராஜபக்ஷ, கொவிட் ஒழிப்புச் செயற்குழுவின் உறுப்பினராகவும் பெரும் பணியாற்றினார்.

பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் காலநிலை மாற்றத்துக்குப் பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் பசில் ராஜபக்ஷ, உள்ளார். 

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புஷ்பா ராஜபக்ஷ ஆகியோர், இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

எம்.பியாக பதவிப்பிரமாணம்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்ட பசில் ராஜபக்‌ஷ, அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, இன்று (08) முற்பகல் சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

நிதி அமைச்சராகவும், எம்.பியாகாவும் பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்-Basil Rajapaksa Sworn in As MP & Minister of Finance-Mahinda as Economic Development

கடமையேற்பு
அதனைத் தொடர்ந்து நிதியமைச்சில் இன்றையதினம் (08) பசில் ராஜபக்‌ஷ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Thu, 07/08/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை