போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணுமாறு ஜனாதிபதி பணிப்பு

நேரில் சென்று அமைச்சர் லான்சா ஆராய்வு

நீர்கொழும்பு, கொச்சிக்கடையிலுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இராஜாங்க அமைச்சர் நிமால் லான்சாவுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதன்படி நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று (12) கொச்சிகடை பகுதிக்கு விஜயம்செய்தார். கொச்சிக்கடை நகர  எல்லையில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவு தீர்வாக, முதற்கட்டமாக கொச்சிக்கடை பாலத்திலிருந்து கொழும்பு நோக்கி ஒரு கிலோமீட்டர் தூரத்தைக்கொண்ட பாதையை நான்கு வழிப்பாதைகளாக அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நகர எல்லை மூன்றரை கிலோமீட்டர் நீளமானது, இதனை நான்கு பாதைகளின் கீழ் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக, அதிக நெரிசலான ஒரு கிலோமீட்டர் நீளம் நான்கு பாதைகளாக அகலப்படுத்தப்படும்.

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம், அந்த கிலோமீட்டருக்குள் 200 மீட்டர் சுற்றளவில் 8 வீதிகள் பிரதான பாதையுடன் இணைகின்றமையாகும். நான்கு பாதைகளின் கீழ் பாதையை அகலப்படுத்துவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.நான்கு பாதைகளாக அகலப்படுத்த இலங்கை வர்த்தக சம்மேளம் ஒப்புக் கொண்டுள்ளது. இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா,

நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்க ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தண்டுகமவிலிருந்து புத்தளம் செல்லும் நெடுஞ்சாலையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்குள் 100 கி.மீ தூரத்தின் அபிவிருத்தி ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும்.

நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலின் பேரில், பேலியகொடையிலிருந்து புத்தளம் செல்லும் பாதையின் போக்குவரத்து நெரிசல் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வத்தளை, ஜா-எல, கந்தான,நீர்கொழும்பு, கொச்சிடை மற்றும் அடையாளம் காணப்பட்ட பிற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுப்பாதைகளை அகலப்படுத்தவும், நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தவும், மாற்றுப்பாதைகள் மற்றும் மேம்பாலங்களை அமைக்கவும் திட்டங்கள் உள்ளன. மக்கள் மற்றும் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்து தொடர்புடைய திட்டங்கள் செயல்படுத்தப்படுமென்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா மேலும் தெரிவித்தார். இதன்போது நீர்கொழும்பு மேயர் தயான் லான்சா,நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர் பேமசிறி மற்றும் வீதி அபிவிருத்து அதிகார சபையின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tue, 07/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை