ஊடகங்களை அடக்குவது அரசல்ல; எதிர்க்கட்சியே

அமைச்சர் வியாழேந்திரன் குற்றச்சாட்டு

ஊடகங்களை அடக்குவது நாமல்ல எதிர்க்கட்சியினரே என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம், அண்மைக்காலமாக ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தால் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேற்று கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கமோ,  ஜனாதிபதியோ, பிரதமரோ ஊடகங்களையோ ஊடகவியலாளர்களையோ ஒருபோதும் அச்சுறுத்துவதில்லை.எதிர்கட்சியினர்தான் இவ்வாறு கூறுகின்றனர், அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்துகின்றது, வர வேற்கின்றது. எதிர் கட்சியினரே இவ்வாறு போலியாக அரசங்கத்தின் மீது பலி கூறுவதை நான் பார்க்கின்றேன். நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். வெளிநாடுகளில் கடன் வாங்கவேண்டும் அல்லது மக்களிடம் வரி எடுக்க வேண்டும். மக்களிடம் வரி எடுப்பது என்பது எமது நாட்டைப் பொறுத்தவரையில் மக்களுக்கு பாரிய சுமையாக மாறிவிடும்.

கடன் வாங்குவது என்பது சிக்கலான ஒரு விடயம், பாரிய முதலீடுகளை கொண்டு வருவது என்பது மிக முக்கியமானது, நாட்டினுடைய இறைமைக்கு பௌதிக வளத்திற்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் தான் அரசாங்கம் சில திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. முதலீட்டை பொருத்த வரையில் யாரும் நாட்டுக்குச் செய்ய முன்வரலாம். இந்தியாவாக இருக்கலாம் சீனா மற்றும் அமெரிக்காவாக இருக்கலாம் எவராக இருந்தாலும் முதலீடுகளை கொண்டுவரலாம் என்பதைத்தான் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அன்றும் தெரிவித்திருந்தார். இந்த முதலீடுகளின் மூலமாக எம்மவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமாக இருந்தால் அதை நாங்கள் வரவேற்போம். அமைச்சர் பசில் ராஜபக்ஷ தூர நோக்குள்ள ஒருவர் பல அபிவிருத்திகளை செய்துள்ளார். அவருடைய வருகை மிக முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Thu, 07/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை