ஆப்கான் யுத்த தாங்கிகள் பாகிஸ்தானுக்கு கடத்தல்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆப்கான். இராணுவத்துக்கு சொந்தமான தாங்கிகள் மற்றும் இராணுவ தளபாடங்களை பாகிஸ்தானுக்குள் தலிபான்கள் நகர்த்தி வருவதாக ஆப்கானிய சிரேஷ்ட பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கடத்தப்படுவதாக வெளியான செய்தியை தலிபான் பேச்சாளரான ஹிஸ்புல்லா முஹாஜிட் நிராகரித்துள்ளார். இதேசமயம் பாக். இராணுவத்துக்கும் தலிபான்களுக்கும் இடையில் சண்டை நடைபெற்றுவரும் பக்தியா மாகாணத்துக்கு கடந்த சனிக்கிழமை விஜயம் செய்திருந்த பதில் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான ஜெனரல் அப்துல் சத்தார் மிர்ஸாக்வால், உளவுத்துறை தகவல்களின் பிரகாரம் ஸாபுல் மாகாணத்தின் ஊடாக யுத்த தாங்கிகளை தலிபான்கள் பாகிஸ்தானுக்குள் அனுப்பி வருவதாகத் தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு நகர்த்தப்படும் ஆயுதங்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருமாறு தமது படைப்பிரிவுக்கு ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் படைத்தளபதியும் உத்தவிட்டிருப்பதாக மிர்ஸாக்வால் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் எல்லையோர பிரதேசங்கள் பெரும்பாலும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள், காவல்நிலையங்கள் தலிபான்கள் வசம் வீழ்ந்துள்ளன. இந்நிலைகளில் உள்ள ஆயுதங்கள் தலிபான்களிடம் சிக்கியுள்ளன.

பாகிஸ்தானின் பக்தியா மாகாணத்தில் பாக். படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகின்றது. தலிபான்களிடம் வீழ்ச்சியடைந்த இரண்டு மாகாணங்களை பாகிஸ்தான் இராணுவம் மீட்டிருக்கிறது. இச்சண்டையின் போது தலிபான்களுடன் சேர்ந்து சண்டையிட்ட சில பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பக்தியா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Thu, 07/01/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை