ஆர்ப்பாட்டம் நடத்தும் ஜோசப் குழுவினர்!

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் அவர்கள் தங்கியுள்ள வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை விலக்கி கொள்ளுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த 33 பேருக்கும் பிணை வழங்கப்பட்டது. எனினும் பொலிஸார் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரை முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி அங்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இவ்விடயம் கடந்த வாரம் பாராளுமன்றத்திலும் பெரும் அமளிதுமளியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட இக்குழுவினர் தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு,

Mon, 07/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை