பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளை அலைகளை முழு வாக்கியங்களாக அமைக்கும் சாதனம்

உலகில் முதல்முறையாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளை அலைகளைக் கொண்டு முழு வாக்கியங்கள் அமைக்கும் நரம்பியல் சாதனத்தை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான ஆய்வறிக்கை ஒன்றில் அதுபற்றிய விவரம் வெளியிடப்பட்டது.

இயற்கையாகப் பேச முடியாதவர்களுக்கு இது ஒரு முக்கியமான தொழில்நுட்ப மைல்கல் என்று University of California San Francisco-வின் ஆராய்சியாளர் கூறுகிறார்.

இந்த அணுகுமுறை மூலம் கடுமையான பக்கவாதம், பேச்சு இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுக்க இயலும் என்று கூறப்படுகிறது.

20 வயதாக இருந்தபோது பக்கவாதம் ஏற்பட்டுப் பேச்சிழந்த 36 வயதான ஆடவருக்கு அந்த முன்னேற்றம் ஏற்பட்டது.

University of California San Francisco-வின் ஆய்வாளர்கள் மூளை அலைகளை வார்த்தைகளாகத் திரையில் காண்பிக்கும் Brain-Computer Interface Restoration of Arm and Voice எனும் புதிய ஆய்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Sun, 07/18/2021 - 21:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை