எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இணையாக மானியங்கள்

அரசு மக்களை கைவிட்டுவிடவில்லை

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு மக்களை பாதிக்கும் என்பதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அரசாங்கம் மக்களுக்குத் தேவையான மானியங்களை வழங்கியுள்ளதென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சியானது யோசனையொன்றை கொண்டு வரும் போது அதில் அர்த்தம் இருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பார்க்கும் போது அமைச்சர் தவறு செய்யவில்லை என்பதை காட்டுகிறது. இதனால் இது அரசியல் ரீதியலான தீர்மானமே. அமைச்சரவையின் உபகுழுவின் தீர்மானத்தையே அவர் அறிவித்துள்ளார். இதனால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை எந்தவித அடிப்படையும் இல்லாதது.

மிகவும் அநீதியான வகையில் பிரேரணையை கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சியிலேயே ஒரே நிலைப்பாட்டில் யாரும் இந்த தீர்மானத்தில் இல்லை. எமது நாட்டின் பொருளாதார நிலைமையில் எரிபொருள் விலையை அதிகரித்தால் வாழ்க்கைச் செலவுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் அரசாங்கம் தேவையான மானியங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது. தற்போது உலகிலாவிய தொற்று நிலைமையில் மக்களுக்கு தேவையான மானியங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது. நாங்கள் சாவல்களுடன் மிகவும் வெற்றிகரமாக செல்ல முடியுமாக இருக்கின்றது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 07/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை