பிரதான சூத்திரதாரிகளை வெளிப்படுத்த அரசாங்கம் தயங்குவது ஏன்?

திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சுமார் 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம்சாட்டினார்.

இவ்வாறு நடவடிக்கை எடுப்பதைத் தாமதப்படுத்துவதன் ஊடாக இவ்விடயத்தை முழுமையாகப் புறந்தள்ளுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக இருந்தால், அதனைப் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக, அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சூத்திரதாரிகளுக்கு எதிராக உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் ஏற்கனவே கூறியதைப்போன்று எரிபொருள் விலையேற்றம் தொடர்பான தீர்மானம் அரசாங்கத்தினுடையது அல்ல என்றால், அவர்கள் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து, எரிபொருள் விலையதிகரிப்பின் மூலம் நாட்டுமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tue, 07/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை