நாட்டின் எதிர்கால நலனுக்கு ஒற்றுமையுடன் செயற்படுவோம்

புனித ஹஜ் தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம்

எமது தாய்நாடான இலங்கை தேசத்தின் வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒற்றுமையுடன் ஒன்றாக செயற்பட இந்நாளில் திடசங்கற்பம் பூணுவோம் என பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

எங்கள் அனைவருக்கும் இடையில் ஒற்றுமை சமாதானத்தை மேன்மைப்படுத்துவதற்கு இறைபக்தியுள்ள வாழ்வை அமைத்துக்கொள்ளத் தேவையான இறை அருள் இப்புனித ஹஜ் யாத்திரையிலும் புனித ஹஜ் பெருநாளிலும் உள்ளடங்கி இருப்பது முழு உலகிற்கும் எடுத்துக்காட்டப்படுகின்றது.

இப்பெருநாள் சகல இன, மத மக்களுக்கும் இடையில் சமாதானம், ஒற்றுமையை உருவாக்குவதற்கு வழிகாட்டுகின்றது. எமது தாய்நாடான இலங்கை தேசத்தின் வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒரே இலங்கையர் என்ற ரீதியில் ஒற்றுமையுடன் ஒன்றாக செயற்பட வேண்டும்.

இந்தப் புனித ஹஜ்ஜுப் பெருநாளை உலகெங்கிலும் சந்தோஷமாகக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பிரார்த்தனை செய்வதுடன் முழு உலகிற்கும் பெரும் சவாலாக விளங்கும் இந்த கொரோனா வைரஸுடைய தாக்கத்தை விட்டு உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதற்காக சுகாதார வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி நடப்போம்.

இந்த கொவிட் 19 தொற்று உலகை விட்டு முற்றாக நீங்கிடவும் இந்நன்நாளில் இறைவனிடம் பிரார்த்திப்போம். ஈத் முபாரக்

Wed, 07/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை