லெகோ கட்டைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது போலவே தோற்றமளிக்கும் துப்பாக்கி - அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்கத் துப்பாக்கித் தயாரிப்பு நிறுவனம் ஒன்று லெகோ (Lego) கட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது போலவே காட்சியளிக்கும் துப்பாக்கி ஒன்றை உருவாக்கி விற்கிறது.

அது அமெரிக்கர்களிடையே சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகிறார்கள்.

நிறுவனம் உருவாக்கியுள்ள துப்பாக்கி மிகவும் வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.

மேலும், லெகோவுடன் துப்பாக்கியை ஒப்பிட்டுப் பார்க்கையில் இரண்டிலும் அதிக ஒற்றுமை இருக்கிறது.

துப்பாக்கியின் விலை, தற்போது 549 டொலருக்கும் 765 டொலருக்கும் இடையில் உள்ளது. துப்பாக்கிகளும், அதைக் கொண்டு சுட்டுப் பார்ப்பதும் வேடிக்கையாக இருப்பதாய் நிறுவனம் அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.

அந்தச் செய்தி பின்னர் நீக்கப்பட்டது.

அமெரிக்காவில் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவேண்டும் என்று வாதிடும் குழுவின் தலைவரான வாட்ஸ், இத்தகைய தயாரிப்பு மிகவும் அபாயகரமானது என்றார்.

Sun, 07/18/2021 - 18:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை