லண்டனிலிருந்து திரும்பிய மருத்துவர் யாழில் மரணம்

PCR பரிசோதனையில் தொற்று உறுதி

லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த வைத்தியர் மாரடைப்புக் காரணமாக வீட்டில் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (80) லண்டனிலிருந்து கடந்த ஜூன் 29ஆம் திகதி அச்சுவேலி திரும்பிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உயிரிழந்துள்ளார். அவர் முன்னாள் அச்சுவேலி வைத்தியசாலை அத்தியட்சகர் என்று உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளதாக நேற்று முன்தினம் இரவு (17) உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் மின் தகனம் செய்யப்படவுள்ளது.

Mon, 07/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை