மெல்பர்னில் ஐந்தாவது முறையாக முடக்க நிலை

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் ஐந்தாவது முறையாக முடக்கப்பட்டுள்ளது. நோய்ப்பரவலை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவர, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மெல்பர்ன் நகரும் அது அமைந்துள்ள விக்டோரியா மாநிலத்தின் மற்ற சில பகுதிகளும் முடக்கப்படும் என்று மாநில முதலமைச்சர் டேன் ஆண்ட்ரூஸ் (Dan Andrews) தெரிவித்தார்.

சிட்னி நகரில், ஏற்கெனவே முடக்கநிலை நடப்பில் உள்ளது. அதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் மொத்தம் 12 மில்லியன் பேர் முடக்கத்தால் பாதிக்கப்படுவர். மெல்பர்ன் நகரில் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கும் முடக்கநிலை, 5 நாட்களுக்கு நடப்பில் இருக்கும்.

Sat, 07/17/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை