அமெரிக்கர்களுக்கு கனடா நாட்டு எல்லைகள் திறப்பு

முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்களுக்காக கடந்த 17 மாதங்களின் பின் அடுத்த மாத்தில் கனடா எல்லைகள் திறக்கப்படவுள்ளன.

கனடாவின் தடுப்பு மருந்து பெற்றவர்கள் எண்ணிக்கையின் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு அங்கு கொவிட்-19 தொற்று எண்ணிக்கையிலும் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸுக்கு எதிரான முன்னேற்றம் தொடர்ந்தால், முழுமையாக தடுப்பூசி பெற்ற சர்வதேச பயணிகளுக்காக செப்டெம்பர் 7 திகதி தொடக்கம் கடனா வருவதற்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் அனைத்து பயணிகளும் தமக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் சோதனை முடிவை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனடா கடந்த 2020 மார்ச் மாத்தில் தனது எல்லைகளை மூடியதோடு விதிவிலக்குகள் தவிர அவசியமற்ற அனைத்து வெளிநாட்டினர்களும் நாட்டுக்குள் வருவது தடுக்கப்பட்டது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட தனது குடிமக்களும் நிரந்தரவாசிகளும், வெளிநாட்டில் இருந்து திரும்பும்போது தனிமைப்படுத்தப்படும் அவசியம் இல்லையென, கனடா, இம்மாத ஆரம்பத்தில் அறிவித்தது.  

அனைத்து கனடா நாட்டவர்களில் சுமார் அரை பங்கினர் முழுமையாக தடுப்பு மருந்து பெற்றுள்ளனர். இவர்களில் 12 வயதுக்கு மேற்பட்ட 56 வீதத்தினரும் அடங்கும். கிட்டத்தட்ட 70 வீதனமான கனடா நட்டவர்கள் குறைந்தது ஒரு முறையேனும் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

Wed, 07/21/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை