பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்

காணொளி மூலம் ஸ்டாலின் கவலை

முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துவந்து பலவந்தமாக வைக்கப்பட்டு ஒருவாரம் கடந்துள்ளது. எமக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் நாம் கொரோனா வைரஸ்

 தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரும், இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தம்மைத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துவந்த பஸ் வண்டியில் 12 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள ஜோசப் ஸ்டாலின், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதா? அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களா?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராகக் கடந்த வாரம் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், முல்லைத்தீவிலுள்ள விமானப்படைத்தளத்திற்குப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Fri, 07/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை