ஆலய திருவிழாக்களை அவதானமாக நடத்தவும்

பிரதமரின் இணைப்பாளர் வேண்டுகோள்

சுகாதார விதிமுறைகளுக்கமைய ஆலய வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழிபாட்டுக்கான தடையை அரசாங்கம் நீக்கியமை இந்து மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட விடயமாகுமென பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

ஆலய திருவிழாக்களில் கலந்துகொள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து பக்தர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆலய நிர்வாகத்தினருக்கு இருக்கின்றது.அத்தோடு, மக்களும் பொறுப்புடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Sat, 07/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை