ஒரே குடும்பத்தை சேர்ந்த வயோதிபர், இரு சிறுவர்கள் பலி

​கொஸ்கொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொஸ்கொட, துவே மோதர கங்கையில் நீச்சல் பழகிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயது இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையின் சுழியோடிகளால் சடலங்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mon, 07/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை