கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிராக கியூபாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

கரீபிய வட்டாரத்தில் உள்ள, இரண்டு சிறிய நாடுகளில் அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.

முதல் நாடான கியூபாவில் (Cuba), கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிராகப் பல்லாண்டுகளில் இல்லாத ஆகப் பெரிய போராட்டங்கள் வீதிகளில் நடந்து வருகின்றன.

30 ஆண்டுகளில் ஆக மோசமான பொருளியல் நெருக்கடியைக் கியூபா எதிர்நோக்குகிறது.

அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடை, உணவு, மருந்து பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளுக்கு இடையே அங்கு கிருமிப்பரவலும் மோசமாகி வருகிறது.

அதை அடுத்து, (கடந்த 11ம் திகதி) அங்கு மொத்தம் 40 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஏழை நாடான ஹெயிட்டியில் (Haiti), சென்ற வாரம், ஜனாததிபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கும் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

கியூபாவுக்கும், ஹெய்ட்டிக்கும் தேவையான உதவிகளை வழங்கத் தயாராயிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Wed, 07/14/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை