பாணந்துறை–நீர்கொழும்பு; மீன்பிடியில் ஈடுபடாதிருக்க மீனவருக்கு அறிவுறுத்தல்

பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீன்பிடி சமுகத்துக்கு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக இந்திய கப்பல் ஒன்று ஆய்வுகளை மேற்கொள்வதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட கடற்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக குறித்த இந்திய கப்பல் கடந்த 25ம் திகதி இலங்கை வந்தது. 26ம் திகதியில் இருந்து இந்த கப்பல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் இந்த ஆய்வுகள் இடம்பெறும்.

இதனால் இந்த நாட்களில் குறித்த கடற் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thu, 07/01/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை