எண்ணெய் உற்பத்தியை உயர்த்த 'ஒபெக்' நாடுகளிடையே இணக்கம்

விலையை குறைப்பதற்கு நோக்கம்

எண்ணெய் விலையை குறைப்பது மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தை தணிக்கும் நோக்கில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு எண்ணெய் உற்பத்தி நாடுகள் இணங்கியுள்ளன.

ஒபெக் குழு மற்றும் ரஷ்யா போன்ற அதன் நட்பு நாடுகள் வரும் ஓகஸ்ட் மாத்தில் இருந்து எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கவுள்ளன. பெருந்தொற்றுக் காலத்தில் எண்ணெய் விலை இரண்டரை ஆண்டுகளில் அதிகரித்ததை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு எண்ணெய் நிரப்பு நிலையங்களில் உச்சத்தை தொட்டிருக்கு எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பென்ட் க்ரூட் எண்ணெய் இந்த ஆண்டில் 43 வீதம் அதிரித்து பீப்பாய் ஒன்று 74 டொலர்களாக உள்ளது.

கடந்த ஆண்டில் பெருந்தொற்று காரணமாக உலகெங்கும் எண்ணெய்யின் தேவை குறைந்ததை அடுத்து சாதனை அளவில் நாளுக்கு 10 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியை ஒபெக் மற்றும் நட்பு நாடுகள் குறைத்துக்கொண்டன.

எவ்வாறாயினும் இந்த ஆண்டில் பொருளாதாரங்கள் திறக்கப்பட்ட நிலையில் எண்ணெய் விலை அதிகரித்ததோடு அது சில நாடுகளில் பண வீக்கத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டு வரும் உலகப் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் உற்பத்தியாளர்கள் உற்பத்திக் குறைப்பில் தளர்வை ஏற்படுத்த கோரி வந்தபோதும், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையே ஏற்பட்ட முறுகல் கடந்த ஜூலையில் அந்தத் திட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

சவூதியின் பரிந்துரை ஒன்றை ஐக்கிய அரபு இராச்சியம் நிராகரித்ததோடு மேலும் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா தனது உற்பத்தி கட்டுப்பாட்டை 2022 ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு முடிவெடுத்தது.

நெருங்கிய நட்பு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல்கள் உலக எண்ணெய் விநியோகத்தில் 50 வீதத்திற்கு மேல் கொண்டிருக்கும் ஒபெக் அமைப்பு மற்றும் கூட்டமைப்புக்கு இடையே ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புதிய உடன்படிக்கையின்படி, சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு உதவும் வகையில் 2021 ஓகஸ்ட் தொடக்கம் டிசம்பர் வரை நாளொன்றுக்கு மேலதிகமாக இரண்டு மில்லியன் பீப்பாய்கள் விநியோகத்தை அதிகரிக்க ஒபெக் மற்றும் நட்பு நாடுகள் இணங்கியுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, ரஷ்யா, குவைட் மற்றும் ஈராக் உட்பட பல நாடுகள் 2022 மே தொடக்கம் அதிக உற்பத்தியை மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளன. கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தியை 2022 செப்டெம்பரில் வழக்கத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் ஒபெக் அமைப்பு தெரிவித்தது.

Tue, 07/20/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை