பிரதமரின் புதிய அமைச்சு செயலாளராக அனுஷ பெல்பிட்ட

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட அனுஷ பெல்பிட்ட, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷவிடமிருந்து நேற்று (14) அலரி மாளிகையில் தனது நியமனக்.கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

இணைந்த சேவைகள் உதவி பணிப்பாளர், ஜனாதிபதி உதவி செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் கணக்காளர், அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முதலாவது பணிப்பாளர் நாயகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் தலைவர், இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் என பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுஷ பெல்பிட்ட, 34 ஆண்டுகால அரச சேவை அனுபவம் கொண்ட சிரேஷ்ட அதிகாரியாவார்.

கடந்த ஜுன் 22ஆம் திகதி அரச துறையிலிருந்து ஓய்வுபெற்ற அனுஷ பெல்பிட்ட அரசியலமைப்பின் பிரிவு 52 (1) இன் அதிகாரங்களின்படி ஜனாதிபதியினால் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இச் சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயங்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான பல சலசலப்புக்களையும் சவடால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் “ எனவும் தெரிவித்துள்ளார்.

 

Thu, 07/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை