பாக்.ஆப்கானிஸ்தான் தூதுவரின் மகள் கடத்தப்பட்டு சித்திரவதை

குற்றவாளிகளை கைது செய்ய பாக்.பிரதமர் உத்தரவு

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவரின் மகள் கடத்தப்பட்டு பல மணித்தியாலங்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தூதுவர் நஜீப் அலிகில்லின் மகள் சில்சிலா அலிகில் இஸ்லாமாபாத் நகரில் வெள்ளிக்கிழமை கார் ஒன்றில் தனது வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

27 வயதான சில்சிலா அலிகில பல மணித்தியாலங்களின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாடகைக் கார் ஒன்றில் சில்சிலா பயணம் செய்து கொண்டிருந்தபோது இடையில் மற்றொரு நபரை காருக்குள் கார் சாரதி ஏற்றிக்கொண்டார் எனவும். அந்நபர், சில்சிலா அல்லை வார்த்தைகளாலும் உடல் ரீதியாகவும் தாக்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வீதியோரம் ஒன்றில் அவர் விடப்பட்டார்.

சில்சிலா அலிகில் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஆப்பானிஸ்தான் தூதுவர் நஜீப் அலிகில்லின் மகள் சில்சிலா அலிகிலை கடத்தியவர்களை 48 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீட் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

Mon, 07/19/2021 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை